அடர்வன பகுதிக்குள் அழுகி நிலையில் ஆண்பிணம்: கொலை செய்து பிணம் வீச்சு?

நெல்லை மாநகரம், பாப நாசம் அடவர்ன பகுதிக்குள் அழுகிய நிலையில், ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்டன. அவரை கொலை செய்து, பிணத்தை இங்கு வீசினரா என போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாநகரம், பாப நாசம், மேற்கு தொடர்ச்சி மலை அடர்ந்த காட்டுப்பகுதியான கன்னி கட்டி என்ற இடத்தில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் பிணம் இருந்தது.

10 நாட்கள் ஆனதால், பிணம் அழுகிய நிலையில் கிடந்தது.
அந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்துப்பணியில் இருந்தபோது பிணத்தை பார்த்து, உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அங்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இவர், மலை வாழ் நபராக இருக்க முடியாது. வனத்துறை சோதனை சாவடியை மீறி, இவர் எப்படி உள்ளே வந்திருக்க முடியும் யாராவது கொலை செய்து பிணத்தை இங்கு வீசினரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.