தமிழகத்தில், பல்வேறு இடங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை:

தமிழகத்தில், பல்வேறு இடங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

கோவை, புலி குளம் ஆறுமுகம் தெருவில் வசிபவர் தினேஷ் இவர் பல் மருத்துவர் இடையார் பாளையத்தில் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தினேஷ் வீட்டில் சோதனை நடத்தியதில், அவர் மாவோயிஸ்ட் ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுங்கத்தை சேர்ந்த டேனியல் என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டு கேரள சிறையில் அடைக்கப்பட்டார். மாவோயிஸ்ட் ஆதரவாளர் சந்தோஷ் எனப்படுவர் தலைமறைவாக உள்ளார். அவர், எங்கு உள்ளார் என் தெரியவில்லை. 

இந்த நிலையில் இன்று காலை கோவை புளியகுளத்தில் தினேசின் வீடு சுங்கம் டேனியல் வீடு பொள்ளாச்சி சந்தோஷ் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன. சிவகங்கை அண்ணா மலை நகரில் பொன் நகரை சேர்ந்தவர் சிங்காரம்,இவரின் சகோதரர் காளி தாஸ். இவர், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்த்தவர்.

இவர், கேரளா தேசிய புலனய்வு முமகை போலீசாரல் கைது செய்யப்பட்டப்பட்டார். இன்று காலை கேரளாவில் இருந்த வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழகம் வந்து, சிவகங்கை மாவோயிஸ்ட் ஆதரவாளர் காளிதாஸ் சகோதரர் சிங்காரம் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும், சேலம், தேனி மாவட்டங்களில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன.

You may have missed