கொத்தவால் சாவடி பகுதியில் சரக்கு வேனில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்திய போதை ஆசாமிகள் கைது

சென்னை, கொத்தவால் சாவடி பகுதியில் இன்று போலீசார் நடத்திய சோதனையில், சரக்கு வேனில் ரகசிய அறை வைத்து, கஞ்சா கடத்திய மூன்று ஆதிரா வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

 சென்னை, கொத்தவால் சாவடி பகுதியில், இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ஒரு சரக்கு வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர்.

அப்போது டிரைவர் போலீசை கண்டதும் மிரண்டார். உடனே உஷாரான போலீசார் சரக்கு வாகனத்தை முழுவதும் சோதனையிட்டனர். அதில் ரகசிய அறை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

அந்த அறையை திறந்து பார்த்ததில், 50 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து, ஆந்திராவை சேர்ந்த சரக்கு வேன் ஓட்டிவந்த டிரைவர் கொண்டா ரெட்டி, அணில் குமார், அஞ்சி ஆகியோரை கைது செய்தனர்.  

இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, அவற்றை சென்னையில் விற்க முயற்சித்தது தெரிந்தது.