மன நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தாக்கி முதியவர் சாவு: கொலை வழக்கு போடலாம என குழப்பம்

நாமக்கல் மாவட்டம்,  பள்ளிப்பாளையத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தாக்கியதில், முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். கொலை வழக்கு பதியலாம என போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் ஆவாரங்காடு சனி சந்தை பகுதிக்கு திருசெங்கோடு, கவுண்டம் பாளையத்தை சேர்ந்த பி.இ படித்த கோகுல் நாத் (23) என்பவர் பாட்டி வீட்டுக்கு செல்ல வந்தார்.

அவர், திடீரென அங்கிருந்தவர்களை பார்த்து, கற்கள் கொண்டு வீசினார். இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கோகுல் நாத்தை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், அவர் கற்களை கையில் வைத்து மிரட்டினார். 

பின்னர் கற்களை கொண்டு வீசியதில், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த வேலப்பன் (75) என்பவர் படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் கோகுல் நாத்தை பிடிக்க முயற்சித்தனர், போலீசார் வந்து, கோகுல் நாத்தை பிடித்தனர்.

காயமடைந்த வேலப்பன் திடீரென உயிரிழந்தார். கோகுல் நாத் குறித்து விசாரித்தபோது, அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. கொலை வழக்கு பதிந்து சிறைக்கு அனுப்பலாமா? மன நல காப்பகத்தில் ஒப்படைக்கலாமா என போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.