முட்டைகளை அடுக்கி வைக்கும் இரண்டு லோடு அட்டைகள் தீயில் கருகின: மின் கசிவு காரணமா என விசாரணை..!

நாமக்கல் மாவட்டத்தில், முட்டைகளை அடுக்கி வைக்கும் இரண்டு லோடு அட்டைகள் தீயில் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள புதுப்பட்டி என்ற இடத்தின் ஆர்பிஎஸ் கோழிப்பண்ணை என்ற பெயரில் முட்டை பேக்கேஜ் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இங்கு திடீரென தீப்பற்றியதில் இரண்டு லோடு முட்டைகள் அடுக்கும் அட்டைகள் தீயில் எரிந்து நாசமாகின . எதிர்பாராதவிதமாக மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.