துண்டு, துண்டாக திமுக பிரமுகர் கொலை; போலீஸ் வரமால் இருந்திருந்தால் ஆற்றில், உடலையும் வீசியிருப்போம்..!

சென்னை, மணலி திமுக பிரமுகர் துண்டு, துண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் அவரின் தலையை அடையாற்றில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் வராமல் இருந்திருந்தால், உடலையும் ஆற்றில் வீசியிருப்போம் என கள்ளக்காதலி வாக்கு மூலம் கொடுத்தார்.

     
சென்னை, மணலி, செல்வ விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராவ், இவரின் மகன் சக்கரபாணி (65). இவர், திமுக கட்சியின் 7வது வார்டு பகுதி பிரதி நிதி.

இவர், கடந்த 10ம் தேதி அன்று, வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மாயமானர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக, மணலி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் தேடி வந்தனர்.

ராயபுரம், கிரேஸ் கார்டன், 3வது தெருவில் வசிக்கும் அஸ்லாம் உஜைனி மனைவி தமீம் பானு (35) என்பவரின் வீட்டில், சக்கரபாணியின் செல்போன் டவர் காட்டியதால், அங்கு தனிப்படையினர் விரைந்தனர்.

அங்கு, போலீசார் சென்றபோது, வீட்டுக்குள் தமீம் பானு, அதே பகுதியை சேர்ந்த மைத்துனன் வசிம்பாஷா (35), ஆட்டோ டிரைவர் டில்லிபாபு (29) ஆகியோர் இருந்தனர்.

வீடு முழுவதும் சோதனையிட்டபோது, குளியலறையில் ரத்தக்கறையுடன், சாக்கு மூட்டை கிடந்தது.

போலீசார், சாக்கு மூட்டையை பிரித்தபோது, அதில், சக்கரபாணியின் உடல் பல துண்டுகளாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடலை கைப்பற்றி, பின்னர், தமீம் பானு உள்ளிட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

அடையாற்றில் தலையை வீசிவிட்டதாக தெரிவித்தனர். அன்று இரவே, ஆற்றில் சக்கரபாணியின் தலையை தேடினர். நேற்று, படகு மூலம், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தேடினர் கிடைக்கவில்லை.

தமீம் பானு , போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், நான் மணலியில் குடியிருந்தேன். என் கணவர், தி நகர் சாலையில் துணி வியாபாரம் செய்கிறார். சக்கரபாணியிடம் கடன் வாங்குவேன், அதில் பழக்கம் ஏற்பட்டு, பின் கள்ளக்காதலாக மாறியது.

ஒரு கட்டத்தில் அவரை விட்டு விலகினேன். ராயபுரம் வந்தேன். கணவர் வாரம் ஒரு முறை தான் வீட்டிற்கு வருவார். கடந்த 10ம் தேதி சக்கரபாணி என் வீட்டிற்கு வந்து, என்னால் , உன்னை மறக்க முடியவில்லை. என உறவுக்கு அழைத்தார்.

இதனால், எனக்கும் அவருக்கும் தகராறு ஆனது, தம்பி வசிம் பாஷா, ஆத்திரமடைந்து, சுவற்றில் மோதியும், கத்தியால் குத்தியும், சக்கரபாணியை கொன்றார். பின்னர் என்ன செய்வது என தெரியாமல், டில்லிபாபுவை அழைத்தோம்.

கொலையானவர் (சக்கரபாணி)

இறைச்சி வெட்டும் கத்தியால், சக்கரபாணியின் தலையை வெட்டினோம். பின்னர், உடலை துண்டுகளாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டினோம், தலையை அடையாறு ஆற்றிலும், குடல் பகுதியை காசிமேடு கடல் பகுதியிலும் வீசினோம்.  

உடலை நேரம்பார்த்து கடலில் வீச இருந்தோம், போலீசில் சிக்கிக்கொண்டோம் என்றனர்.

டில்லிபாபு அளித்த வாக்கு மூலத்தில், தமீம் பானுவுக்கும்,எனக்கும் நெருக்கமான பழகக்ம் ஆனது, சக்கரபாணி தொல்லை கொடுத்ததால் கொன்றோம் பிணவாடை வராமல் இருக்க, வாசனை திரவியங்களை தெளித்தோம்.

போஈசில் வராமல் இருந்திருந்தால், நாங்கள், சக்கரபாணியின் உடலை ஆற்றில் வீசியிருப்போம் என்றார்.