200 ரூபாய் கோடி மோசடி வழக்கு, மும்பை நிதி நிறுவன அதிபர் கைது; பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்

சென்னையில், ரூ.200 கோடி மோசடி வழக்கில் மும்பை நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை, அண்ணாசாலையில், மூன்ஸ் டெக்னாலஜி லிமிட்டெட் நிறுவனம் உள்ளது. இங்கு பல பேர் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனம் மும்பையில் உள்ள கம்பெனியில் ரூ.200 கோடி வரை முதலீடு செய்துள்ளது. அந்த பணம் மோசடி செய்யப்பட்டன. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டன. கூடுதல் டிஜிபி ஆபாஷ் குமார் உத்தரவின் பேரில், ஐஜி தினகரன் மேற்பார்வையில், டிஎஸ்பி பிரகாஷ்பாபு தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு மும்பை நிதி நிறுவன அதிபர்  ரவி பார்த்தசாரதியை கைது செய்து சென்னையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கூட்டாளிகள் அரி சங்கரன், ராம்சந்த் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். எனவே, ஐ.என்.டி,எல் நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாந்த முதலிட்டாளர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. டிஎஸ்பி பிரகாஷ்பாபு செல் நம்பர் 95511-33229, 94981-09600 ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம்,