மகன் மீது தாக்குதல் தட்டிக்கேட்ட தாய்க்கு உருட்டு கட்டை அடி இருவர் சிறையில் அடைப்பு

மகன் மீது நடத்திய தாக்குதலை தட்டிக்கேட்ட தாயை உருட்டு கட்டையால் அடித்த இருவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சேனை, திருவல்லிக்கேணி, ஈஸ்வர தாஸ் தெருவை சேர்ந்தவர் தினேஷ் குமார்(22). இவர், நேற்று அங்குள்ள கெனால் தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு நண்பர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதில், தினேஷ் குமாரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதை கேள்விப்பட்டு, தினேஷ் குமாரின் தாய் ஓடி வந்தார். தான் மகனை தாக்கியது குறித்து அவர் தட்டிக்கேட்டார்.
ஆத்திரத்தில், அவர்கள் தினேஷ் குமாரின் தாயை உருட்டு கட்டையால் அடித்து விட்டு தப்பினார்.
இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, திருவல்லிக்கேணி,
மாட்டாங்குப்பத்தை சேர்ந்த மின்னல் கவின் குமார்(29) பிலிப் பிரேம்குமார்(28) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.