கொரோனா மையமாக மாறிய மசூதி

குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மசூதி மாற்றப்பட்டுள்ளது. இங்கு ஏராளமானோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா தாண்டவம் அதிகரித்துள்ளது. இதனால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கிலும், இறப்பு எண்ணிக்கை நூற்றுக்கணக்கிலும் சேர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என பல கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை முகாமாக மாற்றப்படுகிறது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் வடோதராவில் ஜஹாங்கீர்புரா மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மசூதியை நிர்வாகிகள் மாற்றியுள்ளனர். இது குறித்து மசூதி நிர்வாகிகள் கூறுகையில், குஜராத்தில் படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் மசூதியை சிகிச்சை மையமாக மாற்ற முடிவு எடுத்தோம் என்றனர்.