மாயமான இரண்டு சிறுவர்கள்: குளத்தில் பிணமாக கிடந்தனர்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில், மாயமான இரண்டு சிறுவர்கள், அங்குள்ள குளத்தில் பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி,திரு நாளூர் பகுதியை சேர்ந்தவர் கற்பூர சுந்தேரஸ்வரர் பாண்டி. இவரின் மனைவி சுந்தரி (26). இவர்களின் மகன்கள் நித்திஸ் (6), வித்தீஸ் (4) ஆவர். இவர்கள் விளையாட சென்று, இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து அறந்தாங்கி போலீசில் புகார் கொடுக்கப்பட்டன.
இந்த நிலையில், அங்குள்ள ஒரு குளத்தில், சிறுவர்கள் இரண்டு பேரின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்து, போலீசார் அங்கு சென்றனர்.

பின்னர், சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குளத்தில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.