அமைச்சர் துரைமுருகன் அண்ணன் மகள் தற்கொலை ரயில் முன் பாய்ந்து விபரீதம்

வேலூர் மாவட்டம் பகுதியில், அமைச்சர் துரை முருகன் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீர் வளத்துறை அமைச்சராக இருப்பவர் துரைமுருகன், இவர், திமுக பொதுச்செயலாளர்.

இவரின் அண்ணன் துரை மகாலிங்கம், இவரது மகள் பாரதி(55). இவரின் கணவர் ராஜ்குமார்.

காட்பாடி, காந்தி நகரில் இவர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில், லத்தேரி பகுதியில், பாரதி ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார்.

தகவல் கிடைத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து சென்று, பாரதி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டது தெரிந்தது, அவர் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார் என தெரியவில்லை, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.