சீர்காழி அருகே பயங்கரம்..! மீனவரை எரித்து தூக்கில் சடலம்:

மயிலாடுத்துறை மாவட்டம், சீர்காழி பகுதியில் மீனவரை எரித்துக் கொன்று அவர் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடு துறை மாவட்டம், சீர்காழி திருமுல்லை வாசல் மீனவ கிராமம் பெட்ரோல் பின் புறம் உள்ள செட்டில் இன்று காலை வாலிபர் ஒருவரின் சடலம் தூக்கில் பிணமாக கிடந்தது. அந்த சடலம் முழுவதும் எரிந்த நிலையில் இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சீர்காழி போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் பூம்புகாரை சேர்ந்த  
ரவி மகன் குணா (30) எனவும், மீனவர் என தெரியவந்தது. குணாவை எரித்துக்கொன்று, தூக்கில் தொங விட்டனரா என விசாரணை நடந்து வருகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed