சிகிச்சையில் இருந்தபோது, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தாயிடம், தங்க செயின் திருட்டு..!

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் சிகிச்சையில் இருந்த, தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தாயிடம், தங்க செயின் திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, திருவொற்றியூர், ஜீவன் லால் நகர், 5வது தெருவை சேர்ந்தவர் மோகன் குமார். இவரின் மகன் அனுப்(31). இவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில், மேனேஜராக வேலை பார்க்கிறார்.

அந்த மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் செல்வராஜ் குமார், இவரின் தாய் செல்வ நாயகி உடல் நலக்குறைவால், அங்கு அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 15 நாட்களாக, அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நேற்று அவரின் கழுத்தில் கிடந்த 17 சவரன் தங்க செயின் காணவில்லை.

இது குறித்து, அனுப், திருவொற்றியூர் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில், பெண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண் குறித்து விசாரிக்கின்றனர்.