ஓசியில், சிகரெட் கேட்டு தகராறு; பெட்டிக்கடை பெண்ணை தீயிட்டு, கொல்ல முயற்சித்த நபர் கைது

சென்னை, ஓட்டேரி பகுதியில் ஓசியில், சிகரெட் கேட்டு தராத ஆத்திரத்தில், பெட்டிக்கடை பெண்ணை தீயிட்டு கொளுத்த முயற்சித்த நபரை கைது செய்தனர்.

சென்னை, ஓட்டேரி, எட்வர்ட் பார்க் தெருவை சேர்ந்தவர் ரேணுகா தேவி(52). இவர், அங்குள்ள திருவிக தெருவில், பெட்டிக்கடை வைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர், இவரது கடைக்கு, பிரக்ளின் தெருவை சேர்ந்த குமார் (எ) குள்ள குமார் (52) என்பவர் வந்தார்.

அப்போது, அவர், ஓசியில் சிகரெட் கேட்டதாக தெரிகிறது. ஆனால், ரேணுகா தேவி தர மறுத்தார்.

ஆத்திரத்தில், பெட்டிக்கடையில் வைத்திருந்த சிறிய பாட்டிலில் இருந்த மண்ணெண்ணய்யை எடுத்து, ரேணுகா தேவி மீது ஊற்றி தீ வைத்தார். ஆனால், ரேணுகா தேவி மீது தீப்பற்றவில்லை.

இதையடுத்து, குள்ள குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ரேணுகா தேவி கொடுத்த புகாரின் பேரில், குள்ளகுமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஓட்டேரி பகுதியில் சுற்றி திரிந்த , குள்ள குமாரை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.