விடுதலை புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பு; இரண்டு வாலிபர்கள் கைது

சேலம் மாவட்டத்தில், யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த, இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டார். இவர்கள் விடுதலை புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் என தெரிந்து. இது தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் நவீன் சக்கரவர்த்தி, செவ்வாய்பேட்டை சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவரும், செட்டிச்சாவடி பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.

இவர்கள் வீட்டில், வெடிமருந்து, துப்பாக்கி செய்ய்ம் உபகரணங்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தனர்.

கடந்த மே மாதம், இவர்கள் இருவரும், வாகன சோதனையில் சிக்கினர். அப்போது, வீட்டை சோதனையிட்டபோது, கைத்துப்பாக்கிகள், கத்தி முகமூடிகள் என இருந்தது. துப்பாக்கி தயாரிக்கப்படும் உபகரணங்களும் சிக்கின.

சேலம் ஓமலூர் போலீசார், நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், பல்வேறு இடங்களில், கல்குவாரிகளுக்காக, மலைகள் தோண்டப்படுகிறது.

இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. கற்களை ஏற்றி வரும் லாரிகளை வெடி வைத்து தகர்க்க திட்டம் தீட்டியிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இவர்களின் மற்றொரு நண்பர் கல்லாங்குத்து பகுதியை சேர்ந்த கபிலர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள், விடுதலை புலிகள் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அதுப்போன்று ஒரு இயக்கத்தை தமிழகத்தில் இயக்கவும், ஆயுத போராட்டம் நடத்தவும் திட்ட மிட்டு இருந்தனர்.

இதையடுத்து, இந்தவழக்கை, தேசிய புலனாய்வு முகமை அமைப்பு கையில் எடுத்து விசாரிக்கிறது.