லோடு வேன், ஆக்டிவா மோதல்: பென் எஸ்.ஐ படுகாயம்..!

காந்தி மண்டபம் மேம்பாலத்தில் லோடு வேன் மோதியதில், ஆக்டிவாவில் இருந்து கீழே விழுந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.

சென்னை, பல்லாவரம், சலசிங்முதலி தெரு, அருமலை சாவடியை சேர்ந்தவர் அருள். இவரின் மனைவி சித்ரா (46) இவர், கிண்டி அனைத்து மகளிர் காவல நிலையத்தில், சப் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

நேற்று முன் தினம் மாலை வேலை முடிந்து சித்ரா, ஹோண்டா ஆக்டிவா இரு சக்கர வானகத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். காந்தி மண்டபம் மேம்பாலத்தில் இருந்து, மத்திய கைலாஷ் நோக்கி சென்றார்.

 அப்போது, லோடுவேன், சித்ராவின் ஆக்டிவாவில் மோதியது. அவர், முன்னால் சென்ற கார் மீது மோதாமல் இருக்க, பிரேக் அடித்தார்.

அதில், அவர் வண்டியுடன் நிலைத்தடுமாறி விழுந்ததில், சித்ராவுக்கு, வலது பக்க நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.