கையெழுத்திட ஆயிரம் கேட்டதால் வக்கீல் மீது சரமாரி தாக்குதல், இரண்டு பேர் சிறையில் அடைப்பு

சென்னை, ஆலந்தூர் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட ஆயிரம் ரூபாய் கேட்டதால் வக்கீல் மீது சரமாரி தாக்குதல் நடத்திய இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை, ஆலந்தூர், நன்மங்கலம், விஜயலட்சுமி  நகரை சேர்ந்தவர் கோபிநாத் (34) ஆவார். இவர் ஆலந்தூர்  நீதிமன்றத்தில் இருந்த போது இரண்டு பேர் வந்தனர். நோட்ரிக் பப்ளிக் கையெழுத்துப் போட வேண்டும் என கேட்டனர். கோபிநாத், சீனியர் வழக்கறிஞர் சேகரிடம் அழைத்து சென்றார். அவர் அந்த நபர்களிடம் ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தட்டிக்கேட்ட கோபிநாத் மீது அந்த நபர்கள் தாக்குதல் நடத்தினர். பரங்கிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆலந்தூரை சேர்ந்த அப்துல் ரகுமான் (30), சையத் சமியுல்லா (39), ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.