ஜீன்ஸ் பேண்ட் பெல்ட்டில் மறைத்து ஒன்றரை கிலோ தங்க பேஸ்ட் கடத்தல், ஏர்போர்ட்டில் குமரி வாலிபர் கைது

துபாயில் இருந்து ஜீன்ஸ் பேண்ட் பெல்ட்டில் மறைத்து ஒன்றரை கிலோ தங்க பேஸ்ட் கடத்திய குமரி வாலிபர் ஏர்போர்ட்டில் கைதானார்.

துபாயில் இருந்து பிளை துபாய் சிறப்பு விமானம் ஒன்று, இன்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சாமினா ஜோசையா (26) என்பவர் துபாயில் வேலை பார்த்து விடுமுறைக்கு வந்திருந்தார். அவர், சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் ஏதும் இல்லை என கிரீன் சேனல் வழியாக விருட்டென்று கிளம்பினார். அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து ஜோசையாவை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது ஜீன்ஸ் பேண்ட் பெல்ட்டில் ஒன்றரை கிலோ தங்க பேஸ்ட்  அடங்கிய பிளாஸ்டிக் பவுச்சை மறைத்து வைத்திருந்தார். அதன் மதிப்பு ரூ.63 லட்சம் ஆகும். தங்க பேஸ்ட்டை பறிமுதல் செய்து ஜோசையாவை கைது செய்தனர்.

x