25 ஆயிரம் எரிசாராயம் கடத்தல், லாரியுடன் பறிமுதல்..! டிரைவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், 25 ஆயிரம் எரிசாராயம் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, மத்திய பிரேதசத்தை சேர்ந்த டிரைவரை கைது செய்தனர்.

 
பெங்களூருவில் இருந்து, புதுச்சேரிக்கு டாரஸ் லாரியில் எரிச்சாராயம் கடத்தி வரப்பட்டன. விழுப்புரம் மத்திய புலனாய்வு துறை போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை மிட்டப்பள்ளி கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த டாரஸ் லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில், 35 லிட்டர் அளவுக்கொண்ட 600 கேன்களில் எரிச்சாராயம் கடத்தி வரப்பட்டன தெரியவந்தது.

சுமார், 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை லாரியுடன் பறிமுதல் செய்து, ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையடுத்து, லாரி டிரைவர் மத்திய பிரேதசத்தை சேர்ந்த பாலந்திரசிங் என்பவரை கைது செய்தனர்.