சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய்-மகள் பலி..!

கோவில் பட்டியில், சிக்கன் கிரேவி சாப்பிட்டு குளிர்பானம் குடித்த தாய்-மகள் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷமாய் மாறியதா என ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றனர்.

கோவில் பட்டி, தங்கப்பன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், டிப்பர் லாரி டிரைவராக உள்ளார். இவரின் மனைவி கற்பக வல்லி (34), இவரரின் மகள் தர்ஷினி (7), பாண்டி (8) ஆவர்.


இந்த நிலையில், இளங்கோவன் வெளியில் சென்றிருந்த நிலையில் கற்பக வல்லி, தர்ஷினியை அழைத்துக்கொண்டு, சிப்பிபாறைக்கு சென்றார். அங்கு, ஒரூ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது, ஓட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி சாப்பாட்டுக்கு வைத்து சாப்பிட்டனர்.

கற்பகவல்லி, தர்ஷினி சாப்பிட்டுள்ளனர், பாண்டி சாப்பிடவில்லை. அரைமணி நேரத்தில் கற்பக வல்லி, தர்ஷினிக்கு கிறு கிறுனு தலை சுற்றல் ஏற்பட்டன. உடனடியாக அருகில் உள்ள பெட்டிக்கடையில் 10 ரூபாய் குளிர்பானம் வாங்கி தாய், மகள் குடித்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் வாயில் நுரை தள்ளி மயங்கினர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, கோவில் பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், தீவிர சிகிச்சை அளித்தும் கற்பக வல்லி, தர்ஷினி உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, ஓட்டலில் வாங்கிய சிக்கன் கிரேவி செத்துப்போன கோழியில் சமைக்கப்பட்டதா அது சாப்பிட்டவுடன், மயக்கம் வந்து குளிர்பானம் குடித்ததில் விஷமாய் மாறி உயிரை பறித்ததா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may have missed