அழகிய கொம்புகளுடன் அசத்தல் கருமலையில் கடாமான்: வால்பாறை மக்கள் மகிழ்ச்சி

கோவை, வால்பாறை, கருமலையில், அழகிய கொம்புகளுடன் கடாமானை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்..

 கோவை மாவட்டம், வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் காட்டுப்பகுதிக்குள் இருந்து வெளியேறி உணவு, தண்ணீருக்காக குடியிருப்புக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.


இந்த நிலையில், கருமலை எஸ்டேட்டில் அடிக்கடி கடாமான்கள் வந்து செல்கின்றது. ஆனால், மக்கள் அதை பார்க்க விரும்பும் போது தென்படுவதில்லை.

இந்த நிலையில்,  இன்று காலை எஸ்டேட் மருத்துவமனையில் அழகிய கொம்புடன், கடா மான் ஒன்று அங்குள்ள புதர் செடியில் நுழைந்து தழைகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தது. இதை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்தனர்.