கோவை மாணவி தற்கொலை வழக்கு: இயற்பியல் ஆசிரியரை தூக்கில் போடுங்கள், கோஷத்தால் பரபரப்பு..!

கோவையில், பாலியல் தொல்லை காரணமாக, மாணவி தற்கொலை செய்த வழக்கில் கைதான இயற்பியல் ஆசிரியரை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்தனர். கோர்ட் வளாகத்தில், பெண்கள் சிலர் தூக்கில் போடுங்கள் என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டன.

கோவையில், தனியார் பள்ளியில் படித்த, பிளஸ் டூ மாணவி பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


இந்த நிலையில், மேற்கு மகளிர் போலீசார் மிதுன் சக்கரவர்த்தியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க,கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனு மீதான விசாரணை நடைபெற்று, நீதிபதி குலசேகரன், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் மிதுன் சக்கரவர்த்தியை முகத்தை மூடி, கோர்ட்டு வெளியில் அழைத்து வந்தனர்.

அப்போது, அங்கிருந்த சில பெண்கள் , தூக்கில் போடுங்கள் என கோஷம் எழுப்பியதாக தெரிகிறது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டன.