கொடநாடு கொலை, கொள்ளை; கபோர்ட் அமைத்தவரிடம் விசாரணை..!

கொடநாடு பங்களாவுக்கு கபோர்ட் அமைத்துக்கொடுத்த, சஜீவன் சகோதரர் கூடலூர் சுனிலிடம் விசாரணை நடத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொட நாடு பங்களாவில், 2017 ம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை சம்பவம் நடந்தது.

கொட நாடு தேயிலை தோட்டத்தின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.  பங்களாவில் ஏராளமான சொத்து ஆவனங்கள், தங்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த வழக்கில், மனோஜ், சயன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலையில், ஜெயலலிதாவின்  கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் இறந்தார். இந்த நிலையில், பின்னர் இந்த வழக்கில், கனகராஜ் சகோரதர் தன்பால், ரமேஷ் உள்ளிட்டோர் கூடுதலாக கைதாகினர்.

இந்த வழக்கு விசாரணையில் பெரிதும் எதிர்பாக்கப்பட்ட கொடநாடு எஸ்டேட் பங்குதாரரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலாவிடமும், பங்களாவில் கபோர்ட் வேளைபாடுகளை செய்த அதிமுக வர்தக அணி மாநில நிர்வாகி சஜீவன், அவரின் சகோதரர் சிபி உள்ளிட்டோரிடமும், அதிமுக முன்னாள் எம் எல் ஏ ஆறுகுட்டி, அதிமுக பிரமுகர் அனுபவ்ரவி உள்ளிட்டோரிடமும் விசாரணைக்குள் வந்தனர்.

அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் கபோர்டு செய்யும் பணி செய்து தந்த சஜீவன் சகோதரர் சுனிலிடம் விசாரணை நடந்தது.

பி ஆர் எஸ் கிரவுண்டில் காவலர் பயிற்ச்சி பள்ளி வளாகத்தில் வைத்து,  ஐ ஜி சுதாகர் தலைமையிலான விசாரணை குழு, இரண்டாவது முறையாக இன்றும ஆஜரான சுனிலிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.

சுனிலுக்கு பங்களாவின் முக்கிய அறை அமைப்புகள் பற்றி தெரிந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சுனிலிடம் காலை 11 மணி முதல் விசாரணை நடத்தினர்.