மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலும் கே.எல்.ராகுல் இல்லை?

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாக என்டிடிவி செய்தி தெரிவிக்கிறது.

கொரோனாவிலிருந்து மீண்டுவந்துள்ள கே.எல்.ராகுலுக்கு இன்னும் அதிகமான ஓய்வு தேவை என்பதால், அவர் டி20 தொடரில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.

இந்தியா, மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே வரும் 29ம் தேதி முதல் டி20 தொடர் தொடங்க உள்ளது, ஆகஸ்ட் 7ம் தேதிவரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தொடரில் இந்திய 2-0 என்று தொடரை வென்றுவிட்ட நிலையில் அடுத்ததாக டி20 தொடரில் விளையாட உள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவண் தலைமையில் இந்திய அணி விளையாடியது. ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

டி20 தொடருக்கு ரோஹித் சர்மா மீண்டும் அணியில் இணைய உள்ளார்.

கேஎல் ராகுல் இல்லாத நிலையில் டி20 தொடருக்கு தொடக்க வீரராக இஷன் கிஷன் அல்லது ரிஷப் பந்த் இருவரில் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது.

கடந்த ஜூன் மாதம் ஹெர்னியா அறுவை சிகிச்சைக்குப்பின் ராகுல் இதுவரை சர்வதேச போட்டிகளில் எதிலும் பங்கேற்கவில்லை.

மே.இ.தீவுகள் டி20 தொடருக்கு கேப்டனாக ராகுல் அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டார்.

தற்போது கொரோனாவிலிருந்து மீண்டாலும், அவரின் உடலுக்கு ஓய்வு தேவை.

அதேசமயம், மே.இ.தீவுகள் தொடருக்குப்பின் அமெரிக்க அணியுடன் டி20 தொடர், ஜிம்பாப்பே தொடரில் ராகுல் நிச்சயம் விளையாடுவார்.