பைக்கில் கடத்தி, வாலிபர் கொலை; ஊராட்சி தலைவர் மகன் உள்ளிட்ட, 8 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை, அம்பத்தூர் பகுதியில் முன் விரோதம் காரணமாக, பைக்கில் கடத்தி வாலிபர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் ஊராட்சி தலைவர் மகன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

சென்னை, அம்பத்தூர், சூரப்பட்டு, அன்னை இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவர், அதே பகுதியில், தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார்.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவருடன், கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மோதல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு, உதயகுமார், மோசஸ் வீட்டிற்கு சென்றார்.

ஆனால், மோசஸ் அங்கு இல்லை, அவரி தாயிடம், உன் மகனை நான் சும்மா விடமாட்டேன் என மிரட்டிவிட்டு, உதயகுமார் அங்கிருந்து கிளம்பினார்.

மோசஸ்க்கு இது தெரியவரவே, ஆத்திரமடைந்து, நண்பர்களுடன் சென்று, உதயகுமாரை பைக்கில் கடத்தினர்.

ஆள் இல்லாத இடத்தில் வைத்து, அவரை சரமாரியாக வெட்டிக்கொன்று தப்பினர்.

தகவல் கிடைத்து, உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, உதயகுமார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின் போலீசார் வழக்கு பதிவு செய்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகன் சரண், அப்புன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். மோசசை தேடி வருகின்றனர்.