கரூரில், மாணவி தற்கொலை விவகாரம்: உருக்கமான கடிதம் எழுதி வைத்து கணித ஆசிரியர் தூக்கில் தொங்கினார்..!

கரூர் மாவட்டத்தில், பாலியல் தொல்லை காரணமாக, பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துக்கொண்டார். அந்த பள்ளியின் கணித ஆசிரியரும் உருக்கமான கடிதம் எழுதி வைத்து தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.

கரூர் மாவட்டம், அரசு காலனியில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவி, பாலியல்தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

அவர் எழுதி வைத்த கடிதத்தில் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலைக்கு செய்துக்கொள்ளும், கடைசி பெண்ணாக நானாக தான் இருக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

வெங்கமேடு போலீசார் மாணவி தற்கொலைக்கு யார் காரணம் என விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அந்த பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். பசுபதி பாளையத்தில்  மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்த சரவணன், துறையூர் செங்காட்டு பட்டியில் உள்ள மாமனார் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.

அவர் எழுதி வைத்த கடித்ததில், மாணவிகளை கோபமாக திட்டியுள்ளேன், ஆனால் அந்த மாணவியின் தற்கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

ஆனால், என்னை பற்றி தவறாக பேசுகின்றனர். அவமானமாக இருப்பதால், அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள், நீங்கள் நன்றாக படியுங்கள் என குறிப்பிட்டு இருந்தார்.

துறையூர் போலீசார் கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் சாவுக்கு யார் காரணம் என தெரியாத நிலையில், கணித ஆசிரியர் தூக்கிட்டு இறந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.