மீன் விற்பனை செய்யும் தாயை பேருந்தில் இருந்து இறக்கி விடுவதா?முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை..!

கன்னியாகுமரியில் மீன் விற்கும் தாயை, பேருந்தில் விட்டு இறக்கி விட்டது, வேதனை அளிப்பதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.

மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது.

எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.