விரைவில் பாபநாசம் 2? – கமலின் அடுத்த திட்டம் என்ன?

கமல், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில், மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்த ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் ரீமேக் வேலைகளும் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படத்துக்காக கமல்ஹாசன் 35 நாட்கள் கால்ஷீட் ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘பாபநாசம்’ முதல் பாகம் போலவே, இந்த 2-வது பாகமும் தனித்த கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இயக்குநர் ஜீத்து ஜோசப் கவனத்துடன் திரைக்கதையை கையாள திட்டமிட்டுள்ளார். அதற்காக 2 மாதங்கள் பிரத்யேகமாக செலவிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த கவுதமிக்கு பதிலாக, சிம்ரன், நதியாவிடம் பேசி வருகின்றனர்.

படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த 2 படங்களைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கமல் நடிக்க இருப்பதும் உறுதியாகியுள்ளது. இதில் கமல் 2 வேடம் ஏற்று நடிக்க உள்ளதாகவும் தெரிகிறது.