தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டில், நகை – பணம் கொள்ளை:

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டையில், தனியார் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டு உடைத்து நகை-பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை, பாத்திமா நகர் பகுதியில் வசிப்பவர் விஸ்வேஸ்வரன் (36). இவர், அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராக உள்ளார்.

சம்பவத்தன்று வீட்டை பூட்டிக்கொண்டு, கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர், வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை வெள்ளிப்பொருட்கள் ஆகியவை கொள்ளையடிகப்பட்டிருந்தன. புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.