எங்கள் இடத்தை அபகரிக்க முயற்சி: தாய், இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியால் பரபரப்பு..!

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர், தங்களின் இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக கூறி தாய், இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவரின் மனைவி சித்ரா (36), இவரின் மகன் அஜித் (13), சுவாஸ்திகா (9) ஆவர். இவர், இரண்டு பிள்ளைகளுடன், கள்ளக்குறிச்சி அலுவலகம் வந்தார்.

திடீரென நுழைவு வாயிலில், இரண்டு பிள்ளைகளின் உடம்பில் மண்ணெண்ணய் ஊற்றி. சித்ராவும் தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு பாதூகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி, அவர்களை காப்பாற்றினர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், 25 வருடமாக அனுபவித்து வரும் இடத்தை, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாக புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால், குழந்தைகளளுடன் தீக்குளிக்க முயற்சித்ததாக சித்ரா தெரிவித்தார்.