ஒரே நேரத்தில், மாணவ-மாணவி தற்கொலை..! சாவில் சந்தேகம்: உறவினர்கள் போராட்டம்..!

கள்ளக்குறிச்சியில், ஒரே நேரத்தில் மாணவ – மாணவி தற்கொலை செய்துக்கொண்டனர். அவர்களின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உரவினர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பு ஏற்பட்டன.

கள்ளக்குறிச்சியில், கோமுகி ஆற்றங்கரையில், ஒரே பள்ளியை சேர்ந்த மாணவ – மாணவி தற்கொலை செய்துக்கொண்டனர். குதிரை சந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜன் மகள் சுவேதா (16).

இவர், அங்குள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். கடந்த 20 தேதி, கடைக்கு போனவர் வீடு திரும்பவில்லை. அதே கிராமத்தை சேர்ந்த குழந்தை வேல் மகன் அரிக்கிருஷ்ணன் (16), இவரும், அதே அரசு பள்ளியில் படித்து வந்தார்.


இந்த நிலையில், ஆற்றில் நிவேதா பிணமாக கிடந்தார். அங்குள்ள வேப்ப மரத்தில் தூக்கில் அரிக்கிருஷ்ணன் பிணமாக கிடந்தார். கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி, இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, இருவரின் உடல்களை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்தவர்கள், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர், இவர்களின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, உறவினர்கள் ஒன்று திரண்டு கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். போலீசார், உரிய விசாரணை நடத்துகிறோம் என் கூறியதின் பேரில், போராட்டம் கைவிடப்பட்டன.