பத்து வருடமாக நடைபெற்றது அவன் இவன் வழக்கில் தீர்ப்பு இயக்குனர் பாலா விடுவிக்கப்பட்டார்

நெல்லையில், பத்து வருடமாக நடைபெற்ற, அவன், இவன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு இயக்குனர் பாலா விடுவிக்கப்பட்டார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில், கடந்த 2011ம் ஆண்டு, அவன், இவன் படம் வெளியானது. இந்த படத்தில் ஆர்யா, விஷால் நடத்திருந்தனர். இந்த படத்தில், நெல்லையில் பிரசித்திப் பெற்ற சொரிமுத்தையனார் கோவில், சிங்கப்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்து கருத்துகள் வெளியிடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதன்படி, சிங்கப்பட்டி இளைய  ஜமீன்தார் சங்கராத்மஜன் வழக்கு தொடர்ந்தார்.

பத்து வருடமாக நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டன.  அம்பாசமுத்திரம்  குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கார்த்திக்கேயன் இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த பின்னர்  நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் கல்பாத்தி ஆகியோர் ஏற்கனவே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். மனதார குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யப்படாததால், இயக்குனர் பாலாவை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பொய் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது, மகிழ்ச்சியாக உள்ளது என இயக்குனர் பாலா தெரிவித்தார். அப்போது, பாலா வழக்கறிஞர் முகமது உசேன் உடன் இருந்தார். மேலும், சிங்கப்பட்டி ஜமீன் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ், மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

You may have missed