ஆபரணத் தங்கம் விலை அதிகரிப்பு: சவரண் மீண்டும் ரூ.38ஆயிரத்தை தொடட்டது: இன்றைய விலை நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன்20) உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சரணுக்கு 160 ரூபாயும் அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,745க்கும், சவரண் ரூ.37,960க்கும் விற்பனையானது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.4,765 ஆகவும், சவரணுக்கு, ரூ. 160 உயர்ந்து, ரூ.38 ஆயிரத்து120க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை கடந்த 3 நாட்களாக சவரண் ரூ.38,120 க்குள் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

சவரண் நேற்று ரூ.37ஆயிரமாகக் குறைந்திருந்த நிலையில் மீண்டும் இன்று ரூ.38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

தங்கத்தில் விலையில் பெரிதாக உயர்வு இல்லாத நிலையில் அதில் முதலீடு செய்வது சரியானதாக இருக்கும் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெள்ளி விலை இன்று காலை மாற்றமில்லாமல் இருக்கிறது. வெள்ளி கிராம் ரூ.66.00க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.66,000க்கு விற்பனையாகிறது.

கடந்த 18ம் தேதி முதல் வெள்ளி கிலோ ரூ.66,300 வரை தொடர்ந்து 4 நாட்கள் இருந்தது.

ஆனால், நேற்று மாலை வர்த்தகம் முடிவில் 300 ரூபாய் குறைந்து ரூ.66 ஆயிரமாக இருந்தது, அதே நிலை இன்று காலையும் மாற்றமில்லாமல் நீடிக்கிறது.