கள்ளக்காதலுக்கு இடையூறு; 2 வயது பெண் குழந்தையின் கையை உடைத்த தாய்க்கு சிறை

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த, 2 வயது பெண் குழந்தையின் கையை உடைத்த தாயை சிறையில் தள்ளினர்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலை பகுதியை சேர்ந்தவர் கபிலன். இவரின் மனைவி தமிழரசி(21). இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு, இரண்டரை வயதில் ஜனனி என்ற பெண் குழந்தை உள்ளது.

கருத்துவேறுபாடு ஏற்பட்டு, ஜனனி பிறந்த இரண்டு மாதங்களில், கபிலைனை விட்டு, தமிழரசி பிரிந்து விட்டார். குழந்தை ஜனனி, தமிழரசியிடம் இருந்தது. தனியாக வசித்த தமிழரசிக்கு, சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

 நாளைடைவில் அது, கள்ளக்காதலாக மாறியது, சிவா, அடிக்கடி, தமிழரசி வீட்டுக்கு வந்து செல்வார்.

அவருடன், தமிழரசி தகாத உறவில் ஈடுபட்டு வந்தார். அந்த நேரத்தில், குழந்தை ஜனனி, பசிக்கு அழுகின்றபோது, தமிழரசி பிரம்பால், கையால் தாக்கி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 24ம் தேதி அன்று தமிழரசி, சிவா தகாத உறவில் இருந்தபோது, குழந்தை ஜனனி, தாயிடம் செல்ல  அடம்பிடித்தது.

அப்போது, இடையூறு செய்த ஜனனியின் வலது கையை இழுத்து பிடித்து கொடூரமாக தள்ளினார். இதில், ஜனனிக்கு கையில் முறிவு ஏற்பட்டது.

மருத்துமனையில், குழந்தை ஜனனி சிகிச்சையில் இருந்தபோது, குழந்தைகள் நல அலுவலர் காருண்யா தேவி (41) என்பவருக்கு, விஷயம் தெரிந்து.

அவர் உடனடியாக, வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, தமிழரசியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.