2022-23ம் ஆண்டுக்கான IT ரிட்டனை நிரப்புவது எப்படி? புதிய மாற்றங்கள்: வருமானவரி துறை புதிய தகவல்

2022-23ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டனை இ-பைலிங் செய்வது குறித்து வருமானவரித்துறை தங்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

வருமானவரித்துறை ட்விட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில் “26ஏஎஸ், ஏஐஎஸ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்யும் முன் கவனிக்கவும். விரைவாக தாக்கல் செய்யவும்”எனத் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஐடி ரி்ட்டன் தாக்கலில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

உதாரணமாக, வழக்கமான வரிவிதிப்பில் இருக்கிறீர்களா அல்லது விரிவிதிப்பு முறையை மாற்றுகிறீர்களா என்று வருமானவரித்துறை கேட்கிறது.

வருமானவரி செலுத்துவோர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய கடைசித் தேதி 2022, ஜூலை 31ம்தேதியாகும்.

தணிக்கை முறை அமலாகும் பிற வரி செலுத்துவோருக்கு ஐடிரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடு அக்டோபர் 31ம் தேதியாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பரிமாற்றங்களுடன் தொடர்புடைய வரிசெலுத்துவோருக்கு நவம்பர் 30ம் தேதி கடைசித் தேதியாகும்.

வருமானவரி ரிட்டனை எவ்வாறு தாக்கல் செய்வது குறிந்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் சில ஆவணங்கள் முக்கியமாகத் தேவைப்படும்.

 1. பான் கார்டு
 2. ஆதார்க கார்டு
 3. ஃபார்ம் 16
 4. வங்கிக் கணக்கு விவரம்
 5. முதலீட்டு விவரம், ஆதாரங்கள்
 6. பிற வருமானவிவரம், ஆதாரங்கள்
  ஆதார், பான்கார்டையும் இணைத்துவிட்டார்களா என்பதை மீ்ண்டும் ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

எவ்வாறு ரிட்டனை தாக்கல் செய்வது

 1. வருமானவரி்த்துறை இணைதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ க்கு செல்ல வேண்டும்.
 2. இ-பைலிங் போர்டலில் லாகின் செய்ய வேண்டும். யுசர்ஐடி, பாஸ்வேர்டு, கேப்சாவை பயன்படுத்தி நுழைய வேண்டும்
 3. E-file மெனுவைக் கண்டறிந்து, அதில் ஐடிஆர் லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
 4. உங்களை ஐடிஆர் பக்கத்துக்கு அழைத்துச்செல்லும். அங்கு உங்களின் பான் எண் தானாகவே நிரப்பிவிடும்.
 5. எந்த நிதியாண்டுக்கான பைலிங் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.அதாவது 2022-23 நிதியாண்டு என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
 6. ஆன்-லைன் மோட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்
 7. நீங்கள் எந்த ஸ்டேட்டஸ் என்பதை நிரப்ப வேண்டும். அதாவது தனிநபர்,ஹெச்யுஎப் என்பதை பதிவிட வேண்டும்
 8. ஐடிஆர் ஃபார்மைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவு ITR-1, ITR-4 இதில் எதுபொருத்தமானதோ அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 9. தேர்ந்தெடுத்தபின் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்.
 10. அடுத்துவரும் திரையில் நாம் குறிப்பிட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.
 11. பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களில் ஏதாவது மாற்றம் தேவையெனில் மாற்றலாம்.
 12. அனைத்து தகவலையும் பதிவிட்டு முடித்துவிட்டால், அதன்பின் சப்மிட் கொடுக்க வேண்டும்.
 13. கன்ஃபார் செய்துவிட்டால் அதை மீண்டும் வெரிபை செய்து சப்மிட் கொடுக்க வேண்டும். இதற்கு சில நிமிடங்கள் ஆகும்.
 14. சரியான வெரிபிகேஷன் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.