சன்ரைசர்ஸ் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம் கிடைக்கும் என நான் நினக்கவில்லை: டேவிட் வார்னர் குமுறல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்ற கேள்விக்கு இதுவரை விளக்கமும் இல்லை, காரணமும் தெரிவிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தனது ஆதங்கத்தை கொட்டித் தீரத்துவிட்டார்.


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அடுத்த ஆண்டு சீசனிலும் தொடர்வதற்கு டேவிட் வார்னர் விருப்பமாக இருந்தாலும், அது நடக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இந்த சீசனில் கடைசி 5 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன், முன்னாள் கேப்டனான வார்னரை பெஞ்சில் அமரவைத்தனர்.


இந்த சீசனின் நடுப்பகுதியில் வார்னரிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. கேப்டன் பதவி பறிக்கப்பட்டபின்பிருந்து சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டமும் ஆட்டம் கண்டது. வார்னருக்குப் பதிலாக கேன் வில்லியம்ஸன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த 2018ம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்வார்னருக்கு ஓர் ஆண்டு தடை விதி்க்கப்பட்டபோது வில்லியம்ஸன் கேப்டன் பொறுப்பேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஐக்கியஅரபு அமீரகத்துக்கு வந்தபின் சிலபோட்டிகளில் வார்னர் எதிர்பார்த்த பேட்டிங் செய்யவில்லை என்பதால்,அவர் தொடர்்ந்து 5போட்டிகளில் அமரவைக்கப்பட்டார். வார்னர் என்ற ஒரு சீனியர் வீரர் மட்டும் பெஞ்சில் அமரவைக்கப்படவில்லை என்று சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ் விளக்கமும் அளித்தார்.


கடந்த 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியை வழிநடத்தி கோப்பையை பெற்றுக் கொடுத்த வார்னர், ஐபிஎல் தொடரில்4 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த வார்னருக்கு கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தையும் அணி நிர்வாகம் கூறவில்லை, அவரை நடத்திய முறையும் சரியில்லை.


அனைத்து சீசன்களிலும் மிகச்சிறப்பாக ஆடிய வார்னர் இந்த ஐபிஎல் சீசனில் 8 இன்னிங்ஸில் 195 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.


இந்நிலையில் ஆங்கில ஏடு ஒன்றுக்கு டேவிட் வார்னர் அளித்த பேட்டியில் சன்ரைசர்ஸ் கேப்டன் பதிவியிலிருந்து ஏன் நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கமும், காரணமும் தெரிவிக்கவில்லை. அதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படவும், அணியிலிருந்து வெளிேயற்றப்படவும் என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?
100 சதவீதம எனக்கு என்ன காரணம் என  எனக்குத்தெரியாது.

சன்ரைசர்ஸ் நிர்வாகத்தினர் மீதும், பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ், லட்சுமண், டாம் மூடி, முரளிதரண் ஆகியோர் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். ஒருமுடிவு எடுக்கப்படும்போது, அது ஒரு மனதாக இருக்கவேண்டும். ஆனால்,  உங்களுக்கான மாற்று வீரர் யார், உங்களை யார் தேர்வு செய்ய வேண்டும், யார் உங்களை விரும்பவில்லை என எதுவுமே தெரியாது. கடைசிநாளில், நீங்கள் விளையாடப் போவதில்லை என்ற தகவல் மட்டும் கூறப்பட்டது.


எனக்கு இது மிகுந்த வேதனையாக இருந்தது. நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. இதுபோன்ற கசப்பான விஷயங்களை ஜீரணிப்பது என்பது கடினமானது. ஆனால், நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம், பதில் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. ஆதலால் அடுத்தக் கட்டத்துக்குநான் நகர்ந்துதான் ஆக வேண்டும்.


அடுத்துவரக் கூடிய ஐபிஎல் ஏலத்தை நோக்கியிருக்கிறேன். சன்ரைசர்ஸ்அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை, ஆனால் முடிவு உரிமையாளர்களிடம் உள்ளது. எந்த திசையில் உரிமையாளர் செல்ல விரும்புகிறாரோ.


சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பிதிவிட்ட கருத்தில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து விலகுவதுபோல் ரசிகர்களுக்கு நன்றி ெதரிவித்திருந்தீர்களே?
அணி நிர்வாகத்தால் மீண்டும் ஏலம் எடுப்பக்கப்படமாட்டீர்கள் என்று சில நேரங்களில் நீங்கள் உணர்வீர்கள். சின்ன சமிக்கைகள் அணிக்குள் எழுவதைப் பார்ப்போம்.

என்னுடைய கண்ணோட்டத்தின்படி, சுவற்றில் எனக்கானது எழுதப்பட்டதை நான்பார்த்துவிட்டேன்.

ஆதலால் ரசிகர்களுக்கு நன்றி கூற சரியான நேரம் எனநினைத்தேன்.
இவ்வாறு வார்னர் தெரிவித்தார்.

You may have missed