மருத்துவமனைக்குள் புகுந்து கைவரிசை டாக்டரிடம், துப்பாக்கி முனையில் கொள்ளை; நான்கு பேர் கைது

சென்னை, சோழிங்க நல்லூர் பகுதியில், மருத்துவமனைக்குள் புகுந்து, டாக்டரிடம் துப்பாக்கி துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த நான்கு பேரை கைது செய்தனர்.
சென்னை, சோழிங்க நல்லூர், ஓ.எம்.ஆர். பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர், நான்கு பேர் கொண்ட கும்பல் நுழைந்து, துப்பாக்கி முனையில், டாக்டரிடம் 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்தனர்.
கத்திரிகோலை கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.
இது குறித்த புகாரில் சோழிங்க நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களில் பிரகாஷ் என்பவனை மட்டும் கைது செய்தனர்.
அவன் கொடுத்த தகவலின் பேரில், பிரதாப், சத்திய சீலன், பிரதாப் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், இவர்கள் கடலூர், சிதம்பரம் காட்டு மன்னார் கோயில் பகுதியை சேந்தவர்கள் என தெரிந்தது.
கும்பலாக சென்று, துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையில் தனிப்படை விரைந்து கொள்ளையர்களை பிடித்தது.
கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.