கூல்பார் கடையில் சோதனை; 36 கிலோ குட்கா பறிமுதல்..! பெண் உட்பட மூவர் கைது

சென்னை, மாம்பலம் பகுதியில் கூல்பார் கடையில் சோதனை நடத்திய போலீசார், 36 கிலோ குட்கா பொருளை பறிமுதல் செய்து, பெண் உட்பட மூவரை கைது செய்தனர்.

சென்னை, மாம்பலம் , நடேசன் தெருவில் கூல் பார் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் அதிகளவில் கூட்டம் வந்தது.

சந்தேகமடைந்து, சிலர் மாம்பலம் போலீசாருக்கு தகவல் தந்தனர். போலீசார் அங்கு சென்று கூல் பார் கடையில் திடீரென சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், தடை செய்யப்பட்ட  36 கிலோ கொண்ட ஹான்ஸ், கூலிப் பாக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

குட்கா பொருளை விற்ற அரக்கோணம், சுப்புராயன் தெருவை சேர்ந்த ரம்யாவதி (45), மாம்பலம், நடேசன் தெருவை சேர்ந்த சஜூமோன்(45).

ராணிப்பேட்டை, தாலிக்கால் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(38) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.