மினி ஹாஸ்பிடலாக மாறிய இந்திய அணி: பும்ராவும் விலகல்: நடராஜன் ‘கம்மிங்’


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆஸி.ப் பயணம் மேற்கொண்டதலிருந்து இந்திய அணி மினி மருத்துவமனையாக மாறிவிட்டது. தொடர்ந்து வீரர்கள் காயம் அடைந்து நாடு திரும்புவதும், போட்டியிலிருந்து விலகுவதும் நடந்து வருகிறது.

CANBERRA, AUSTRALIA – DECEMBER 02: Thangarasu Natarajan of India celebrates dismissing Marnus Labuschagne of Australia during game three of the One Day International series between Australia and India at Manuka Oval on December 02, 2020 in Canberra, Australia. (Photo by Cameron Spencer – CA/Cricket Australia via Getty Images)


அந்தவரிசையில் தற்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் இணைந்துவிட்டார்.
ஏற்கெனவே காயம் காரணமாக இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கேஎல் ராகுல், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ள நிலையில் இப்போது பும்ராவும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாக பிசிசிஐவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சிட்னியில் ஆஸ்திேரிலயாவுக்கு எதிராக நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின்போது பும்ராவுக்கு அடிவயிற்றில் பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் பிரிஸ்பேனில் வரும் 15-ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்டில் பந்துவீச இயலாத சூழலில் இருப்பதால், விலகுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பும்ராவுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்த காயம்பெரிதாக மாறிவிடக்கூடாது என்பதால், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


பும்ரா இல்லாத நிலையில் தமிழக வீரர் டி நடராஜன் அணிக்குள் வருவதற்கு வாய்புக் கிடைத்துள்ளது. வரும் 15-ம்தேதி தொடங்கும் ஆஸிக்கு எதிரான கடைசி டெஸ்டில், சிராஜ், ஷைனி, ஷர்துல் தாக்கூர், நடராஜன் ஆகியோர் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது.