கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 98 சதவீதமாக உயர்வு:

Mumbai: Health workers take swab samples of passengers at Chhatrapati Shivaji Maharaj Terminus Railway Station, amid spike in Covid-19 cases, in Mumbai, Wednesday, April 14, 2021. (PTI Photo) (PTI04_14_2021_000153B)

இந்தியாவில் கொரோனாவிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 98 சதவீதத்தை எட்டியுள்ளனர். கடந்த 224 நாட்களில் இல்லாத அளவு தினசரி தொற்று 14 ஆயிரமாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவி்த்துள்ளது.


இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் புதிதாக 14ஆயிரத்து 313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 920ஆக அதிகரி்த்துள்ளது.


கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 900 ஆகக் குறைந்துவிட்டது. கடந்த 224 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 447 பேர்சிகிச்சையிலிருந்து குணமடைந்து சென்றுள்ளனர். கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 33 லட்சத்து 20 ஆயிரத்து 57 பேர் குணமடைந்துள்ளனர்.


ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 0.63 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் மிகக் குறைவாகும். தொடர்ந்து 18வது நாளாக கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 30ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 11 லட்சத்து 81ஆயிரத்து 76 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 58 கோடியே 50 லட்சத்து 38ஆயிரத்து 43 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.


கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 181 பேர் உயிரிழந்தனர், ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 50ஆயிரத்து963 ஆகக் அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 95.89 கோடியைக் கடந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You may have missed