இந்தியா-ஆஸ்திரேலியா டி20 தொடர், டெஸ்ட் தொடர்: வெளியானது புதிய அட்டவணை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி அடுத்த ஓர் ஆண்டு எந்தெந்த நாட்டு அணிகளுடன் விளையாடப் போகிறது என்பது குறித்த அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இதில் “ஆஸ்திரேலிய அணி அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஏராளமான டி20, ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக உள்நாட்டில் ஜிம்பாப்வே, நியூஸிலாந்து, மே.இ.தீவுகள், இங்கிலாந்து அணிகளுடன் டி20 தொடர்களில் பங்கேற்கிறது.

செப்டம்பர் மாதம் இந்தியா பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதன்பின் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலிய அணி போட்டி அட்டவணை:
2022-ஜூன்-ஜூல: இலங்கை பயணம் (3டி20, 3 ஒருநாள் போட்டி, 2டெஸ்ட்)

2022-ஆகஸ்.செப்டம்பர்: ஜிம்பாப்வே (3 ஒருநாள் போட்டி), நியூஸிலாந்து (3 ஒருநாள் போட்டி)

2022-செப்டம்பர்: இந்தியாவுடன் 3 டி20 போட்டிகள்
2022-அக்டோபர்: மே.இ.தீவுகள், இங்கிலாந்து அணியுடந் 6 டி20 போட்டிகல்

2022-அக்-நவம்பர்: டி20 உலகக் கோப்பை
2022-நவம்பர்: இங்கிலாந்துடன் 3 ஒருநாள் போட்டித் தொடர்
2022-23 டிசம்பர்-ஜனவரி: மே.இ.தீவுகள் (2டெஸ்ட்), தென் ஆப்பிரிக்கா (3டெஸ்ட், 3ஒருநாள்)

2023-பிப்ரவரி மார்ச்: இந்தியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர். 2023-மார்ச்-மே: ஐபிஎல் டி20 தொடர். 2023- ஜூன் ஜூலை: இங்கிலாந்து சென்று ஆஷஸ் டெஸ்ட் தொடர் (5டெஸ்ட்)

2023-ஆகஸ்ட்: தெ.ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் (3டெஸ்ட்)
2023-அக்-நவம்பர்: இந்தியாவில் ஒருநாள்போட்டி உலகக் கோப்பை
இந்திய அணி ஜூன்9ம் தேதி மதுல் 19ம் தேதிவரை தென் ஆப்பிரிக்க அணியுடன் உள்நாட்டில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதன்பின் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுஅயர்லாந்து அணியுடன் 2டி20 போட்டிகளில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அந்தபோட்டிகள் முடிந்தபின் இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

கடந்த ஆண்டு கோவிட் தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்ட கடைசி டெஸ்டில் இந்திய அணி விளையாடுகிறது.