விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து இரண்டே நாட்கள் ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டன

விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்து இரண்டே நாட்கள் ஆன பெண் குழந்தை மீட்கப்பட்டன சாலையோரத்தில் இரண்டு நாட்களாக கேட்பாரற்று கிடந்தது.
விழுப்புரம் மாவட்டம் காவணிப்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் பிறந்து இரண்டே நாட்கள் ஆன பெண் குழந்தை ஒன்று கிடந்தது. அந்த குழந்தை சாலையோரத்தில் கேட்பாரற்று இருந்தது. தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சைல்டு ஹெல்ப் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த குழந்தை யாருடையது, ஏன் சாலையில் வீசினர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.