இந்தியாவில் ஒரேநாளில் 3.17 லட்சம் பேர் கொரோனாவில் பாதிப்பு: ஒமைக்ரான் தொற்று 10ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் ஒரேநாளில் 3.17 லட்சம் பேர் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமிக்ரானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10ஆயிரத்தை நெருங்கியது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் 249 நாட்களில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் 3 லட்சத்து 17ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 82லட்சத்து 18ஆயிரத்து 773 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் தொற்றும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த பாதிப்பு 9,287ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 19 லட்சத்து 24 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை கடந்த 234 நாட்களில் இது மிக அதிகபட்சமாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 491 பேர் உயிரிழந்தனர், இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 87ஆயிரத்து 693ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 159.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த பாதிப்பில் கொரோனாவில் சிகிச்சையில் இருப்போர் 5.03 சதவீதமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 93.69 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.