பாக் பிரதமர் இம்ரானுக்கு கொரோனா: விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை தான் சீனா தயாரித்த கொரோனா தடுப்பூசியை பிரதமர் இம்ரான் கான் செலுத்திக் கொண்ட நிலையில், 2 நாட்களில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

சீனா தயாரித்த சினோஃபார்ம் தடுப்பூசிகளை 5 லட்சம் டோஸ் மருந்துகள் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி 1ம் தேதி வழங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

68 வயதாகும் இம்ரான் கான் சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுச் கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான் கான் முகக்கவசம் இன்றி பங்கேற்றார், புதிய விட்டு வசதித் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பிரதமர் இம்ரான் கான் சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட நிலையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி

பிரதமர் இம்ரான் கானின் தனிச்சிறப்பு உதவியாளர் ஃபைஸல்சுல் தான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிரதமர் இம்ரான் கான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தும் கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் ” பிரதமர் இம்ரான் கான் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துத்தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.