வரும் 5ம் தேதி இளவரசி விடுதலை? – கொரோனா சிகிச்சையில் குணமானார்

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். அவரது தண்டனை காலம் முடிந்து, வரும் 5ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என பேசப்படுகிறது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சசிகலாவுடன் விக்டோரியா அரசு மருத்துவமனையில் இளவரசி சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலாவுக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடைந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சசிகலா சிகிச்சை பெற்ற இடைவெளியில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை முடிவடைந்ததால் அவர் பெங்களுருவில் உள்ள பண்ணை வீட்டுக்கு ஒய்வு எடுக்க்கிறார்.

தற்போது இளவரசிக்கு கொரோனா தொற்று முழுமையாக குணமடைந்ததால் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இளவரசிக்கு இன்னும் தண்டனை காலம் முடியாததால், அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சிறைக்கு அழைத்து சென்றனர். வரும் 5ம் தேதி காலை 11 மணிக்கு இளவரசி விடுதலையாவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அதுபற்றி அதிகாரிகள் தரப்பில் எவ்வித பதிலும் இல்லை.