மண்டேலாவின் தென் ஆப்பிரிக்கா இதுவல்ல: குயின்டன் டீ காக் செயலுக்கு சல்மான் பட் வேதனை

இனவெறிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு ஒற்றுமையாக சபதம் ஏற்றபோது குயின்டன் டீ காக் மட்டும் தனிப்பட்ட பிரச்சினையால் வராதது, மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க அல்ல என்பதையே காட்டுகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.


கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக்கூடாது என்ற கருத்துக்கு ஆதரவாக விளையாட்டுப் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலி்ட்டு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் சபதம் ஏற்றனர்.


இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.


இந்த அறிக்கை வெளியான சில மணிநேரத்துக்குப்பின் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தார். வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்க வேண்டிய நிலையில் விக்கெட் கீப்பர் டீ காக் தனிப்பட்ட காரணங்களால் களமிறங்கவில்லை என தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து கிளாசன் களமிறக்கப்பட்டார்.


இனவெறிக்கு எதிராக வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம்ஏற்கும்போது குயின்டன் டீ காக் மட்டும் வராதது பெரும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.

ஆனால், டீ காக் முடிவுக்கு மதிப்பளிப்பதாக தெ. ஆப்பிரிக்க கேப்டன் பவுமா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் தனது யூடியூப்பில் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:
டீக் காக் செய்தது புதுவிதமாக இருக்கிறது. இனவெறிக்கு எதிராக அணியில் உள்ள ஒவ்வொருவரும் சபதம் ஏற்கும்போது, மனிதர்கள் அனைவரும் சமம், அவர்களை இனம், நிறத்தின் அடிப்படையில் பிரிக்கக்கூடாது, என்று சபதம் ஏற்கும் போது டீக் காக் வராதது வியப்பாக இருக்கிறது.

முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக சபதம் ஏற்பது என்பது தென் ஆப்பிரிக்க அணியில் ஒவ்வொரு வீரரும் முடிவெடுத்ததுதானே. டீகாக் இ்ந்த முடிவுக்கு ஒத்துழைத்துச் செல்லாத நிலையில்,மேலும் பிரிவினையை அதிகப்படுத்துகிறார். எதற்காக இவ்வாறு டீக் செய்தார் எனத் தெரியவில்லை.


கறுப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் அதிகமாக இருக்கும் நாட்டில் டீகாக் வாழ்கிறார். ஆனால், நிச்சயம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க நாட்டில் அவர் வாழவில்லை. தென் ஆப்பிரிக்காவில் சூழல் மேம்பட்டதும் அவர்களை மீண்டும் உலகத்தின் நீரோட்டத்தில் மண்டேலா இணைத்தார், மக்களை ஒன்றாக இணைத்தார்.

ஆனால் அவர் செய்தவை வீணாகிவிட்டன. அவர் சொன்ன செய்தி மிக எளிமையானது அனைவரும்சமம் என்ற செய்தி மட்டும்தான்
தென் ஆப்பிரிக்க அணியை இடஒதுக்கீடு முறையில்தான் இயங்கி வருகிறது.

அவர்களின் முதல் போட்டியில், அணியில் உள்ள சிலர் ஓரமாகஅமர்ந்தும், சிலர் தனியாக நின்று கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

நிச்சயமாக தெ ஆப்பிரிக்க அணியினர் மனஉளைச்சலோடு இருப்பதாகநினைக்கிறேன். அவர்களின் நம்பிக்கைகள், கலாச்சார வேறுபாடுகள் அதிகமாக வெளிப்படையாகத் தெரியக்கூடாது. இவர்கள்இங்கு கிரிக்கெட் விளையாட மட்டுமே வந்துள்ளார்கள்
இவ்வாறு சல்மான் பட் தெரிவித்தார்.