மீண்டும் வந்த வின்டேஜ் வார்னர்; இலங்கையை ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி.


முதலில் பேட் செய்த இலங்கைஅணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்த வெற்றியின் மூலம் குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலிய அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி தான் பெற்ற இரு வெற்றிகளில் ரன்ரேட்டை அதிகமாக வைத்திருப்பதால் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சூப்பர்-12 சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி பெறும் 5-வது வெற்றி இதுவாகும்.

அரையிறுதிக்கு முன்னேறுவதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால், அடுத்தடுத்துவரும் ஆட்டங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தக்கூடும்.


இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் ெவற்றிக்கு இருவர் முக்கியமானவர்கள் முதலாவது டேவிட் வார்னர், 2-வது ஆடம் ஸம்ப்பா. கடந்த இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பேட்டிங்கில் ஃபார்ம் இல்லாமல் தவித்த டேவிட் வார்னர் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தார்.

ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் மோசமான ஃபார்மில் இருப்பதால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வார்னரை அணியிலிருந்து நீக்கி பெஞ்சில் அமரவைத்தது. பயிற்சி ஆட்டத்திலும் இந்தியாவுக்கு எதிராக டக்அவுட்டிலும், தென் ஆப்பிரி்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.


இதனால் டேவிட் வார்னர் பேட்டிங் ஃபார்ம் மீது மீண்டும் விமர்சனங்கள் கடுமையாக எழத் தொடங்கின. அவை அனைத்துக்கும் நேற்றைய ஆட்டத்தில் தனது பேட்டிங் மூலம் வார்னர் பதில் அளித்தார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்கூட “ என்னுடைய பேட்டிங் ஃபார்மைப் பற்றி பேசுவது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. கடந்தஆண்டிலிருந்து நான் பேட்டிங்கே செய்யவில்லை ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே ஆடினேன் எவ்வாறு நான் பேட்டிங்கில் ஃபார்மில்லை என்று கூறுகிறார்கள்” எனக் கிண்டலாகத் தெரிவித்திருந்தார்.


தன்னைவிமர்சித்தவர்கள், அணியிலிருந்து தூக்கியவர்கள் அனைவருக்கும் வார்னர் பேட்டிங் மூலம் பதில் அளித்துள்ளார். கடந்த காலத்திய வின்டேஜ் வார்னரின் பேட்டிங்கை பார்த்த அனுபவம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அவரின் வழக்கமான ஸ்வீப் ஷாட்கள், கவர் டிரைவ், புல் ஷாட் போன்றவை அவர்மீண்டும் ஃபார்முக்குத் திரும்பிவிட்டதையே உணர்த்தின.

வார்னர் ஆட்டமிழந்தபோது அவர் லாங்ஆன் திசையில் அடித்த ஷாட் கூட அற்புதமானது, ஆனால், துரதிர்ஷ்டமாக கேட்சானது.
கேப்டன் பின்ச்சுடன் சேர்ந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப், ஸ்மித்துடன் சேர்ந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வார்னர் ஏறக்குறைய பலமாதங்களுக்குப்பின் டி20 போட்டியில்அரைசதம் அடித்து, 42 பந்துகளில் 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.


ஆஸ்திரேலிய அணியில் வார்னர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது அந்த அணியின் ேபட்டிங் வரிசையை மேலும் பலப்படுத்தியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறும் நேரத்தில் வார்னரின் ஃபார்ம் ஆஸி.க்கு மிகப்பெரிய ஊக்கத்தைஅளி்க்கும்.


மற்றொரு வீரர் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்ப்பா. இலங்கை அணியின் ரன்ரேட்டுக்கு ஸ்பீடுபிரேக்கர் போட்டு நிறுத்தியவர் ஸம்ப்பாதான். ஒரு விக்கெட்டுக்கு 78 ரன்கள் என்று வலிமையாக இருந்த இலங்கையை அணியை அடுத்த சில ஓவர்களில் 16 ரன்களுக்கு 4 விக்கெட்டை ஸம்ப்பா, ஸ்டார்க் இருவரும் இழக்கச் செய்தனர்.


ஆடம் ஸ்ம்ப்பா 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். ஸ்டார்ஸ் 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இருவரையும் தவிர்த்து கேப்டன் ஆரோன் பின்ச் 23 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதில் 2 சிக்ஸர்கள், 5பவுண்டரிகள் அடங்கும். கடந்த பல மாதங்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்தது, பேட்டிங்கில் மோசமான ஃபார்மில் இருந்தது போன்றவை அவரின் மீது விமர்சனங்களுக்கு நேற்று அவரும் பதில் அளித்தார்.

ஆஸ்திரேலிய அணியில் இரு மிகப்பெரிய பேட்ஸ்மேன்கள் ஃபார்முக்கு திரும்பியிருப்பது அடுத்துவரும் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வைக்கும்.


வார்னர், பின்ச் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். பின்ச்சின் சிக்ஸர்,பவுண்டரி, வார்னரின் ஃபார்ம் ஆகியவற்றால்பவர்ப்ளேயில் 63 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்துவந்த மேக்ஸ்வெல் 5 ரன்னில் வெளிேயறினார்.
ஸ்மித் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி நகர்த்தினர். நேரம் செல்லச் செல்ல வார்னரின் பேட்டிங்கிலும் ரன் சேர்க்கும் வேகமும் அதிகரித்தது. 31 பந்துகளில் வார்னர் அரைசதம் அடித்தார்.

42 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்த நிலையில் சனகா பந்துவீச்சில் வார்னர் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ்ஸ்டாய்னிஷ் ஸ்மித்துடன் சேர்ந்து அணிக்கு எளிதான வெற்றிக்கு வழிவகுத்தார்.
ஸ்டாய்னிஷின் அதிரடியான சிக்ஸர்,பவுண்டரி 17 ஓவர்களில் ஆஸி. வெற்றி பெற வைத்தது.

ஸ்மித் 28 ரன்னிலும், ஸ்டாய்னிஷ் 16 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு இரண்டாலும் தன்னுடைய முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தவில்லை.

154 ரன்கள் அடித்தபோதிலும் அதை டிபென்ட் செய்துவிளையாடாத நிலையில்தான் நேற்று அவர்களின் பந்துவீச்சு அமைந்திருந்தது. ஹசரங்கா ஒருவர் மட்டுமே நன்றாகப் பந்துவீசினார்.

தீக்சனா மீதான எதிர்பார்ப்பும் வீணானது. குமாரா, சமீரா,கருணா ரத்னே மூவரும் ரன்களை வாரிவழங்கினர். இதனால்தான் ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் சேஸிங் செய்ய முடிந்தது.
இலங்கை பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி, ரன்களை விடாமல் இறுக்கியிருந்தால், ஆட்டம் இன்னும் பரபரப்பாகி, ஆஸ்திேரலிய அணியை வீழ்த்தியிருக்கலாம்.

ஆனால், இலங்கையின் பந்துவீச்சில் நேற்று பல் இல்லை. ஆஸ்திரேலிய பேட்ஸமேன்களை மிரட்டிப் பார்க்கும் வகையில், அவர்களுக்கு சிரமமம் கொடுக்கும் வகையில் பந்துவீச்சு இல்லை.


இலங்கை அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை தொடக்கம் நன்றாக இருந்தால், நடுவரிசை காலைவாருகின்றனர். நடுவரிசை நிலைத்தால் தொடக்கம் சொதப்புவது.

இதைத்தான் வழக்கமாக வைத்துள்ளனர். இந்தஃபார்முலாதான் நேற்றும் இருந்தது. குஷால் பெரேரா (35), அசலங்கா (35) இருவர் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் காப்பாற்றத் தவறினர்.

78 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த இலங்கை அணி அடுத்த 16 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ராபக்சே 33 ரன்களுடனும், கருணாரத்னே 9 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.