கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மேலும் 2 தடுப்பூசிகள்: ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மேலும் இரு தடுப்பூசிகள் இருக்கும் , இரு தடுப்பூசிகள் வர உள்ளன. என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாாராமன் அறிவித்தார்.


மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து 9-வது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வருகிறார்.


பட்ஜெட்டைத் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையி்ல் “ பட்ஜெட் தயாரிப்பு இதுவரை இல்லாத சூழலுக்கு மத்தியில், நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இருந்தபோது தயாரிக்கப்பட்டது.


இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன, விரைவில் மேலும் 2 தடுப்பூசிகள் கொண்டுவரப்படும். நம் நாட்டு மக்களை மட்டும் காப்பாற்றாமல், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் மக்களைக் காக்க அது பயன்படும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


கொரோனா வைரஸ் தடுப்பூசிக்காக 2021-22ம் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் அதிகமாகஒதுக்கீடு செய்யப்படும். புதிதாக தற்சார்பு சுகாதாரத்திட்டம் கொண்டுவரப்படும், இந்த திட்டத்துக்காக ரூ.64,180 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
முதலீ்ட்டுச் செலவு அடுத்த நிதியாண்டில் 35 சதவீதம் அதிகமாக ரூ.5.54 லட்சமாக அதிகரி்க்கப்படும்” எனத் தெரிவித்தார்.