பிரசவத்திற்கு சென்ற மனைவி வீடு திரும்பாததால், கணவன் தற்கொலை..!

பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி வீடு திரும்பாததால், மன விரக்தியில், கணவன் தூக்கிட்டு இறந்தார்.

சென்னை, மயிலாப்பூர், நாட்டு சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் ஜானகி ராமன் (32). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.  இவருக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏர்படுமாம்.

இந்த நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவரின் மனைவி, பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றார். வீடு திரும்பாததால், ஜானகி ராமன் மன விரக்தியில் இருந்தார்.

நேற்று முன் தினம், வீட்டில் இருந்த ஜானகி ராமன், தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் கிடைத்து, மயிலாப்பூர் போலீசார் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து, ஜானகி ராமன் உடலை கைப்பற்றி , வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.