பெண்ணை கட்டிப்பிடித்து சீண்டல்; முதியவர் கைது..!

சென்னை, சூளைமேடு பகுதியில் நடந்து சென்ற பெண்ணை, கட்டிப்பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பி சென்ற முதியவரை கைது செய்தனர்.

சென்னை, சூளைமேடு பகுதியை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த 25ம் தேதி அன்று எம்.எம்.டி.ஏ பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார்.

அப்போது, அங்கு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், அந்த பெண்ணை கட்டிப்பிடித்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

பெண் கத்தி கூச்சலிடும்போது, அந்த நபர் அங்கிருந்து தப்பிவிட்டார். புகாரின் படி, சூளைமேடு போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி அம்பத்தூர், கள்ளிக்குப்பம், பசும்பொன் நகரை சேர்ந்த ரவி (58) என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.